முகப்பு

Saturday, December 22, 2012

வித்தியாச மின்னஞ்சல் முகவரிகளை வழங்கும் தளங்கள் சில

எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு பொருத்தமாக, எம் மொழியை நாட்டை என்று அடையாளப்படுத்துவதாக இருந்தால் நன்றாக இருக்குமல்லவா அவ்வாறான மின்னஞ்சலை தருவதுதான் இந்த mail.com. சென்று பாருங்கள் பல நூற்றுக்கணக்கான தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்து மின்னஞ்சல் பெறலாம்.

உதாரணமாக : Graphic Designer ஒருவருக்கு  மின்னஞ்சல் தேவை எனில் Juken@designer.com என்றும். நல்ல தமிழ்பற்றுடையவர் எனில் தமதுபெயர்@tamil.com என்றும் கூட எடுக்கலாம்.





இணையத்தள முகவரி  1.Mail.Com 

                                                  2.TechEmail.com
இத்தளத்தில் @techemail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை பெறலாம்.
                                                  3. easy.com
இத்தளம் @easy.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.
                                                  4.37.com
இத்தளம் @37.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.
                                                  



Saturday, December 1, 2012

காணொளிகளை தரவிறக்க இலகுவான ஒரு புதிய நீட்சி

 நாம் பலநேரங்களில் இணையத்தில் காணும் காணொளிகளை கணினியில் சேமிக்க நினைப்போம் , ஆனால் பல தளங்களில் காணும் வசதி மாத்திரம் இருக்கும்.தரவிறக்குவதற்கான சுட்டியோ, வசதியோ தரப்பட்டிருக்காது.






அந்த குறையினை ANT.Com  என்ற தளம் தனது காணொளி தரவிரக்கப்பட்டை மற்றும் நீட்சி என்பவற்றின் மூலம் நீக்குகின்றது.

நாங்கள் செய்ய வேண்டியது நெருப்புநரி உலாவியை உபயோகிப்பவர்களாயின் நெருப்பு நரி உலாவிக்கான ANT காணொளி தரவிறக்க நீட்சியை நிறுவுதலும், Explore உலாவியை பயன்படுத்துபவர்களாயின் அதற்கான தரவிறக்க பட்டையினையும் நிறுவுதல் மட்டுமே.


நெருப்பு நரி உலாவிக்கான நீட்சியை இணைக்க
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8174/
என்ற சுட்டியிலும்

Explore உலாவிக்கான தரவிறக்கபட்டையை இணைக்க
http://www.ant.com/video-downloader/internet-explorer/என்ற சுட்டியிற்கும் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் உலாவி நெருப்பு நரி எனில் உலாவியின் கீழ்பக்கத்திலும்,
Explore உலாவி எனில் மேலே மற்றய கருவிப்பட்டைகளுடனும்

தரவிறக்க கருவி காணப்படும்.

இனி நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு பிடித்தமான காணொளியை திரையில் திறந்து ஓடவிட்டுவிட்டு(play) Download என்ற பொத்தானை சொடுக்கினால் போதுமானது காணொளி தரவிறங்க ஆரம்பித்துவிடும்.

தரவிறக்கப்பட்ட காணொளிகள் உள்ள கோப்புறைக்கு செல்ல Download பொத்தானின் அருகிருக்கும் பொத்தானை சொடுக்கி Explore என்பதை கொடுக்க தரவிறக்கப்பட்ட காணொளிகள் உள்ள கோப்புறைக்கு செல்லும்.

Monday, November 19, 2012

பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

             பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
                              எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.

படம் 1
  
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
  தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.


படம்2

படம் 3

படம் 4

இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.

Saturday, November 10, 2012

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.

கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

தறவிரக்க முகவரி : http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி  அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, October 11, 2012

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு


பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info


ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு  விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்

Saturday, October 6, 2012

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://cammster.com

இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, September 27, 2012

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

  
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

Wednesday, September 5, 2012

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவது எப்படி

                               

Off line இல் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம்   மின்னஞ்சல் அனுப்பலாம்  மற்றும் ஒன்லைன்னில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டநெட்  கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்கு நீங்கள் கூகுல்குறோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail  சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய [ Tab ]  உருவாகும் அல்லது நீங்கள் ஒரு New Tab உருவாக்குங்கள். இப்பொழுது புதிய Tab இல் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும். அதில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.


அதில் Allow Google Mail என்பதை தெரிவு செய்யவும். இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்கள் மின்னஞ்சல் ID  காட்டும் அதில் எந்த  ID க்கு நீங்கள்  Off line இல் பார்க்க வேண்டுமோ அதை தெரிவு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும். அந்த  ID க்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward  செய்யலாம் அல்லது புதிதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம். மற்றும் ஏதாவது பெரு File லை Attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும் On line இல் உள்ள Move, Label, Mute, Report, Spam, Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள்  Off line இல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன்மூலம் Chat History கூட பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய  இணைப்பு இல்லாமலே பயன்படுத்திக்கொள்ளலாம்.




Friday, August 10, 2012

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
 
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
 
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.



  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Wednesday, July 18, 2012

ஆப்பிள் iOS 6 சிறப்பம்சங்கள்




 MAPS:-





 இது கூகிளுக்கு எதிராகவே ஆப்பிள் சொந்தமாய் மாப்ஸ் ஆரம்பித்து
உள்ளான். இது கூகிள்க்கு ஆரம்பத்தில் ஒரு ஆப்பாய் இருந்தாலும் OFFLINE MAP விட்டு பின்னிடான். யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும். அதை கேள்வி பட்டதில் இருந்து ஆப்பிள் மாப்ஸ் வசதியை ரொம்ப மேம்படுத்தி உள்ளார்களாம். FLYOVER ன்னு ஆகாயத்தில் இருந்து தொங்கிகிட்டு பார்க்கும் வசதி, ஒவ்வொரு TURNING POINTகும் TURNING NAVIGATION CURSOR வசதியோடு 3D வசதி உண்டு. 3Dயில் பார்க்க ரொம்பவே சூப்பர் இருக்கு. TRAFFIC நிலைமையை உடனுக்குடன்
அறிவிக்கும், நாம போகும் நேரத்தை குறைக்க டிராபிக் இருந்து வேறு எந்த
பாதையில் செல்ல என்பதையும் UPDATE செய்யும் வசதி. விபத்து, வேலை (சீரமைப்பு பணி) நடைபெற்றால் அதன் விவரத்தையும் அளிக்கும்.

SIRI:-



கூகிள் இப்ப ஜெல்லி பீனில் இந்த வசதியை கொண்டு வந்து விட்டனர் (ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்த வசதி உள்ளது). IOS6ல் இருந்து SIRI VOICE
அதிகபடியான மொழிகள்,மற்றும் நாடுகளில் செயல்படும் படி உருவாக்கபட்டு
உள்ளது. இதில் உள்ள சில வசதிகள்,

SPORT - நமக்கு பிடித்த விளையாடினை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதில் பெறலாம். அந்த டீம் உள்ள PLAYER NAME, SCORE ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.

MOVIES - நமக்கு எந்த படத்தை பற்றி விவரம் தேவையோ அதை பற்றி தேடாமலேயே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.அந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ், ட்ரைலர், ROTTEN TOMATOES RATING AND REVIEW தெரிந்துக் கொள்ளலாம்.

RESTAURANTS - நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள RESTAURANTS LOCATION, எத்தனை வகையான சாப்பாட்டு உள்ளது, விலை, அந்த சாப்பாட்டு IMAGE வரை காட்டும். அப்படியே அங்க ஒரு TABLE கூட புக் செய்து கொள்ளலாம்.

FACEBOOK :- 

IOS6ல் FACEBOOK AND TWITTER APPLICATION ஒரு சில வசதியோடு தருகின்றனர். நம்ம மொபைல் உள்ள போட்டோ அல்லது கேமராவில் பிடித்த போட்டோவை அப்படியே FACEBOOK AND TWITTERல் SHARE செய்து கொள்ளலாம் SIRI VOICE மூலம் நம்முடைய STATUS UPDATE செய்து கொள்ளலாம்.

PHOTO STREAM:-


நம்ம மொபைல் உள்ள போட்டோவை இணையத்தில் பகிரும் வசதி. அப்படியே போட்டோவை ICLOUDல் SHARE செய்து கொண்டு ஆப்பிள் டிவியில்
போட்டோ STREAMஆக காணலாம். மற்றவர்கள் அந்த இமேஜ்ல் கமெண்ட் மற்றும் லைக் செய்யலாம்.

PASSBOOK:-


AIR TICKET, GIFT CARD, MOVIE TICKET என பெற்று கொள்ளும் வசதி இதில் உள்ளது. (அதுக்கு இதில் பணம் இருக்கனும்).

FACETIME:-



வீடியோ காலிங் வசதி தற்போது 3G மூலமாகவும் பயன்படுத்தலாம்.

PHONE CALLING:-

முக்கியமான வேலையில் இருக்கும் பொது ஏதாவது கால் வந்தால்
அதை கட் செய்யாமல் தடுக்கும் வசதி உள்ளது. கால் வரும்போதே அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப, REMINDER செட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க DO NOT DISTURB வசதி (போன்க்கு மட்டும் தான்).

SAFARI:-

ICLOUD TAB என ஒரு வசதி தந்து உள்ளனர் அதில் நாம் செல்லும் இணைய
பக்கத்தினை TRACK செய்து கொள்ளும் பின்னர் OFFLINEல் அந்த பக்கத்தினை
படித்து கொள்ளலாம்.

Sunday, June 17, 2012

வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.

தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


                                                                  படம் 1

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இணையதள முகவரி : https://www.kareer.me

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sunday, May 13, 2012

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.

புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.good-tutorials.com

CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, April 24, 2012

புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.

நாம் எடுத்த புகைப்படங்களை நம் கணினியில் அல்லது சிடி டிவிடி என்று  ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்திருப்போம், பிளிக்கர் , பிகாசா போன்ற தளங்களை போல் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இந்தத்தளத்தில் நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக பதிவேற்றியும் அதை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்  இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



 புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதற்காகவும் அதை நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட தளம் தான் இந்தத்தளம்.

இணையதள முகவரி :  http://sharypic.com

இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மேல் இருக்கும் Create my account என்பதை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதிவேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த புகைப்படங்களை ஆல்பம் போல் செய்து நம் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனஅனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். பிளிக்கர் பிகாசா போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை கூட நாம் இந்தத்தளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள செய்யலாம். புதுமை விரும்பிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, April 13, 2012

ஆப்பிளின் ஐ-பேட் 3 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம்  புதிய ஐ-பேட்3யை அறிமுகப்படுத்திஉள்ளார்கள். இந்த ஐ-பேட் உயர் வரையறை தொலைக்காட்சியைவிட ( HD TV) 4 மடங்கு வேகமாகவும் 3டி திறனும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஐ-பேடில் 3டி விளையாட்டுக்கள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் படங்களை மிகத்தெளிவாகவும், துல்லியமாகவும் பார்க்க முடியும்.  


ஆப்பிள் ஐ-பேட்-3 ன் சிறப்பு அம்சங்கள்:

* 5 மெகா பிக்சல் கேமரா
* 2084x1536 ரெசொல்யூஷன்
* ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட திரை
* 40 இன்ச் தொலைக்காட்சியைவிட துல்லியமான திரை
* 3டி விளயாட்டுக்கள்
* 4G மொபைல் நெட்வொர்க்குகள்

இந்த ஐ-பேட்கள் 16ஜிபி மெமரியிலிருந்து கிடைக்கும். மேலும் இதில் இணையத்திற்கு மட்டுமேயான பிரத்யோக வை-பை வசதியை கொண்டுள்ளது.

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐ-பேட் 2-யின் அதே விலையில் ஐ-பேட்- 3யும் கிடைக்கும் என கூறப்படுகிறது.  கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 9.25 மில்லியன் ஐ பேட்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, March 30, 2012

USB Disk களை பாதுகாக்க - USB Disk security 6 - Full version

இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security  மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் USB Disk security இன் இலவச பதிப்பையே பயன்படுத்துகின்றனர். அது குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை மட்டுமே ​கொண்டிருக்கும். Pen Drive களிலிருந்து கணனிக்குள் Virus , malicious வருவதை தடுப்பதற்காகவே பயன்படுத்தப் படுகின்றது.


இம் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணனிக்கு Pen Drive களினால் வரக்கூடிய Virus, malicious களின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.  மேலும் உங்கள் கணனியை பாதுகாப்பதற்கு இதனை update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே பொறுத்தப்படாத கணனிகளிலும் இம் இம்மென்பொருளை பயன்படுத்த முடியும்.


இம் மென் பொருளை பயன்படுத்துவதனால் உங்கள் கணனியின் வேகத்தில் எது வித குறைவும் ஏற்பட மாட்டாது. அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்களை உங்கள் கணனியில் நிறுவி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இம் மென்பொருள் உங்கள் அனைவருக்கும் 100% பயனளிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
USB Disk security 6 ஐ இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Serial Key யை தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யுங்கள்.


Wednesday, March 14, 2012

1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம்.

தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால்  கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று  என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.fontsquirrel.com

இத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம்.  குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Monday, March 5, 2012

கூகுளின் புதிய சேவை [ Google Web History அழிப்பது எப்படி]


கூகுள் சேவை, நாளையே கடைசி நாள்



மார்ச் 1 இல்  இருந்து கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது   என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள்  நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள். 

நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?

நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.

இதை எப்படி நீக்குவது?
https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.
இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.

Tuesday, February 28, 2012

நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய தினங்களை ஞாபகப்படுத்தும் புதுமையான தளம்.

நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த  நாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான் இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

 
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்  மறந்துவிட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்த நாள்  மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://live.ss-birthdayreminder.com

இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு  இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து நம்  நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய  தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் செல்லப்பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட  தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு இமெயில் மூலம் ஞாபகப்படுத்தும்  நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லுங்கள் என்று நம்  இமெயிலில் செய்தி வரும். அதன் பின் அலைபேசியிலோ அல்லது  மெயில் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக  இருக்கும். நம் பிறந்த நாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால்  அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம்.மறதியான நமக்கு இது போன்ற தளங்களின் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, February 14, 2012

மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்

அலைபேசி என்று சொல்லக்கூடிய Mobile Phone இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போனில் நாம் விரும்பும் ரிங்டோன் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.




விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இணையதள முகவரி : http://www.musetips.com/free-ringtone-maker.html

இத்தளத்திற்கு சென்று நாம் Download என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம், தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும் Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எதில் இருந்து எதுவரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Save Ringtone to My Computer என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் சேமிக்கலாம். ரிங்டோன் உருவாக்க விரும்பும் நம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Friday, February 3, 2012

புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.

புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

 

                                                               படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.jpegmini.com/main/shrink_photo

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் அளவை குறைப்பதைவிட இது பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் இத்தளத்தை சோதித்து பார்த்து வியந்துவிட்டோம்  உடனடியாக நாம் எடுத்து 3.13MB Size கொண்ட புகைப்படத்தை வெறும் 898 KB ஆக மாற்றியது தரத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இனி எப்படி இத்தளத்தை பயன்படுத்துவது என்று பார்ப்போம். இத்தளத்திற்கு சென்று Upload your photo என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டியது மட்டும் தான் நம் வேலை, அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றிய புகைப்படத்தின் வலது பக்கம் இருக்கும் JPEG Mini என்பதை சொடுக்கி விட்டு  புகைப்படத்திற்கு அடியில் இருக்கும் Download Photo என்பதை சொடுக்கி புகைப்படத்தை தறவிரக்கலாம்.Picasa மற்றும் Flickr இருக்கும் புகைப்படங்களை கூட நாம் எளிதாக தரம், அளவு குறையாமல் எடையை மட்டும் குறைத்து தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, January 24, 2012

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்

உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.  இனி  எப்படி இதனை   இன்ஸ்டால் செய்வது  என்று பார்ப்போம்.


உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.


அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.


Friday, January 20, 2012

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

நாம் பிராட்பேண்ட் இண்டெர்நெட் வைத்திருந்தாலும்
பல நேரங்களில் யூடியூப் வீடியோ தொங்கும் வேகமாக
தெரியாது. இந்த யூடியுப் விரைவாக செயல்படுத்துவது
எப்படி என்று பார்ப்போம். எந்த மென்பொருளும் தேவையில்லை
சில நிமிடங்களில் நாம் யூடியுப் வேகத்தை அதிகப்படுத்தலாம்.


                                                                          படம் 1
 
http://www.youtube.com/feather_beta இந்த இணையதளத்திற்கு
செல்லவும். படம் 1- ல் காட்டியபடி Join the “Feather” Beta என்பதை
க்ளிக் செய்யவும். அதன் பின் சில நிமிடங்களில் இது பயன்பாட்டிற்கு
வந்து விடும்.இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை
பார்க்கவும் வேகமாகத் தெரியும். இது எப்படி செயல்படுகிறது
என்றால் ஒரிஸினல் வீடியோவின் குவாலிட்டியை கொஞ்சம்
குறைத்து நமக்கு வேகமாக காட்டும். குவாலிட்டியில் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இல்லை எனக்கு குவாலிட்டி
தான் முக்கியம் என்றால் படம் 1-ல் காட்டியபடி மேலே உள்ள
இணையதளத்திற்கு சென்று Leave the “Feather” Beta என்பதை
தேர்வுசெய்யவும். பழையபடி குவாலிட்டி உள்ளதாக மாறிவிடும்.
நமக்கு எப்போது வேண்டுமென்றாலும் யூடியுப் வேகத்தை
அதிகபடுத்தலாம்.

Thursday, January 12, 2012

வைரஸ் தாக்கினாலும், செயலிழக்காத புதிய ஏசெர் வகை கணினி

வைரஸ் தாக்கினாலும், செயலிழக்காத புதிய ஏசெர் வகை கணினி
உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணினிகளுள் ஏசரின் ஏசர் வேரிட்டோன் கணினியும் ஒன்றாகும். இந்த வரிசையில் வரும் கணினிகள் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் இந்த கணினி பெரும் உபயோகமாக இருக்கும்.
வேரிட்டோன் வகை கணினிகளுள் பல வகை உள்ளன. ஏசர் ஸட்620ஜி கணினி எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய கணினியாக திகழ்கிறது. குறிப்பாக இந்த கணினி சி.பி.யு, ஸ்பீக்கர்கள், டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் இதன் மோனிட்டர்கள் எல்லாமே ஒரு தனி யூனிட்டில் இருக்கும்.
மேலும் இந்த கணினி, வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வேரிட்டோன் கணினி கருப்பும் வெள்ளியும் கலந்த நிறத்தில் வருகிறது. மேலும் 20வகை எ.இ.டி திரையையும் கொண்டிருக்கிறது. இவ்வகை திரை ரேசியோவிலும் படங்களைப் பெரிதாக்கி தரும்.
தொடர்ந்து இதன் ஹார்ட் டிஸ்க் 500 ஜி.பியைக் கொண்டிருப்பதால் ஏராளமான தகவல்களைச் சேமித்துக் கொள்ள முடியும். வேரிட்டோன் கணினி ஏசர் ப்ரோ ஷீல்டு டேட்டா கார்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. அதனால் இது வெர்ச்சுவல் பைல் ட்ரேடரையும் மற்றும் என்க்ரிப்ட் மறைவான ட்ரைவையும் கொண்டுள்ளது. இதனால், இந்த கணினி வைரசால் பாதிக்கப்பட்டால்நாம் கவலைக் கொள்ள தேவையில்லை. ஏனெனில் இதில் உள்ள ஓன் டச் ரிகவரி பட்டன் மூலம் கணினியைப் புதுபிக்க முடிவதோடு, அதை மீண்டும் செட் செய்யவும் முடியும்.

Sunday, January 8, 2012

ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.


ஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள்
வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன்  மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்  இந்தப்பதிவு.

                                                                   படம் 1

 நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே
சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.citrify.com

இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open  என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால் படம் 1-ல் காட்டியபடி வரும் இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save
என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக்கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடிட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.