முகப்பு

Tuesday, January 24, 2012

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்

உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.  இனி  எப்படி இதனை   இன்ஸ்டால் செய்வது  என்று பார்ப்போம்.


உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.


அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.


Friday, January 20, 2012

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

நாம் பிராட்பேண்ட் இண்டெர்நெட் வைத்திருந்தாலும்
பல நேரங்களில் யூடியூப் வீடியோ தொங்கும் வேகமாக
தெரியாது. இந்த யூடியுப் விரைவாக செயல்படுத்துவது
எப்படி என்று பார்ப்போம். எந்த மென்பொருளும் தேவையில்லை
சில நிமிடங்களில் நாம் யூடியுப் வேகத்தை அதிகப்படுத்தலாம்.


                                                                          படம் 1
 
http://www.youtube.com/feather_beta இந்த இணையதளத்திற்கு
செல்லவும். படம் 1- ல் காட்டியபடி Join the “Feather” Beta என்பதை
க்ளிக் செய்யவும். அதன் பின் சில நிமிடங்களில் இது பயன்பாட்டிற்கு
வந்து விடும்.இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை
பார்க்கவும் வேகமாகத் தெரியும். இது எப்படி செயல்படுகிறது
என்றால் ஒரிஸினல் வீடியோவின் குவாலிட்டியை கொஞ்சம்
குறைத்து நமக்கு வேகமாக காட்டும். குவாலிட்டியில் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இல்லை எனக்கு குவாலிட்டி
தான் முக்கியம் என்றால் படம் 1-ல் காட்டியபடி மேலே உள்ள
இணையதளத்திற்கு சென்று Leave the “Feather” Beta என்பதை
தேர்வுசெய்யவும். பழையபடி குவாலிட்டி உள்ளதாக மாறிவிடும்.
நமக்கு எப்போது வேண்டுமென்றாலும் யூடியுப் வேகத்தை
அதிகபடுத்தலாம்.

Thursday, January 12, 2012

வைரஸ் தாக்கினாலும், செயலிழக்காத புதிய ஏசெர் வகை கணினி

வைரஸ் தாக்கினாலும், செயலிழக்காத புதிய ஏசெர் வகை கணினி
உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணினிகளுள் ஏசரின் ஏசர் வேரிட்டோன் கணினியும் ஒன்றாகும். இந்த வரிசையில் வரும் கணினிகள் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் இந்த கணினி பெரும் உபயோகமாக இருக்கும்.
வேரிட்டோன் வகை கணினிகளுள் பல வகை உள்ளன. ஏசர் ஸட்620ஜி கணினி எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய கணினியாக திகழ்கிறது. குறிப்பாக இந்த கணினி சி.பி.யு, ஸ்பீக்கர்கள், டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் இதன் மோனிட்டர்கள் எல்லாமே ஒரு தனி யூனிட்டில் இருக்கும்.
மேலும் இந்த கணினி, வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வேரிட்டோன் கணினி கருப்பும் வெள்ளியும் கலந்த நிறத்தில் வருகிறது. மேலும் 20வகை எ.இ.டி திரையையும் கொண்டிருக்கிறது. இவ்வகை திரை ரேசியோவிலும் படங்களைப் பெரிதாக்கி தரும்.
தொடர்ந்து இதன் ஹார்ட் டிஸ்க் 500 ஜி.பியைக் கொண்டிருப்பதால் ஏராளமான தகவல்களைச் சேமித்துக் கொள்ள முடியும். வேரிட்டோன் கணினி ஏசர் ப்ரோ ஷீல்டு டேட்டா கார்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. அதனால் இது வெர்ச்சுவல் பைல் ட்ரேடரையும் மற்றும் என்க்ரிப்ட் மறைவான ட்ரைவையும் கொண்டுள்ளது. இதனால், இந்த கணினி வைரசால் பாதிக்கப்பட்டால்நாம் கவலைக் கொள்ள தேவையில்லை. ஏனெனில் இதில் உள்ள ஓன் டச் ரிகவரி பட்டன் மூலம் கணினியைப் புதுபிக்க முடிவதோடு, அதை மீண்டும் செட் செய்யவும் முடியும்.

Sunday, January 8, 2012

ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.


ஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள்
வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன்  மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்  இந்தப்பதிவு.

                                                                   படம் 1

 நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே
சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.citrify.com

இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open  என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால் படம் 1-ல் காட்டியபடி வரும் இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save
என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக்கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடிட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.