முகப்பு

Saturday, April 30, 2011

இந்தியாவில் விமானி படிப்பை அளிக்கும் நிறுவனங்கள்

விமானம் தொடர்பான பல்வேறு படிப்புக்கள் தற்போது  கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான  மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கும் துறை விமானி படிப்பு : 6 மதங்கள் முதல் 2 வருட கல அளவு கொண்ட படிப்புக்கள்  மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன.
பயிலும்  நிறுவனங்கள்  
1. [ madrasflyingclub.net ] சென்னை
2. [www.flytechaviation.com]
3. [ www.rgaviation.com ] 
4. [ igruagov.in ] உத்திரப்பிரதேசம்

Thursday, April 28, 2011

பெயரில்லாமல் போல்டரை உருவாக்க முடியுமா? பதில் முடியும்.

கணக்குமிகுதியை காட்டும் புதியவகை கிரடிட் கார்டுகள்!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. 
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.
அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும்.
மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை பெட்டரி (மின்கலம்) மூலம் இயங்குகிறது.
இந்த பெட்டரிகள் (மின்கலம்) 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.
இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய கிரடிட் கார்டின் வருகைக்குப்பின்னர் இனிமேல் கிரடிட் கார்ட் கொள்ளையர்களுக்கு இலகுவாக பணத்தை திருட முடியாதாம்.

அதாவது தனிப்பட்ட இரகசிய குறியீட்டை வழங்கிய பின்னரே இதன் திரை செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை “சிடி வங்கி” புதிய வகை 2ஜி கார்டை வெளியிட்டுள்ளது.
இது காந்த அமைப்பு கொண்ட கீலம்.
இதில் பொத்தான்கள் அமைந்துள்ளன.
உலகளாவிய ரீதியில் 1.7 பில்லியன் மக்கள் கிரடிட் கார்டை பாவிக்கிறார்களாம்.

இலவச எழுத்துக்கள் தரும் இணையத்தளங்கள்

 
 நீங்கள் கம்புட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் பிராசசர், டி.டி.பி. சொப்ட்வேயர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆகவே, நாம் சில இலவச எழுத்து இணையத்தளங்களை உங்களுக்குத்தருகின்றோம்.  

1. www.fawnt.com:
2. www.abstractfonts.com:
3. www.freefonts.co.in:
4. www.dafont.com:
5. www. free-fonts.com:

யூடியூப் வீடியோக்களை MP3யாக மாற்றம் செய்ய


யூடியூப் தளத்தில் தினமும் லட்சகணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இந்த தளத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவில் இருந்து ஆடியோவினை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் வீடியோவை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து ஓடியோவை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.

இல்லையெனில் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளின் உதவியினை நாடிச் செல்ல வேண்டும். இதற்கு பதிலாக ஓன்லைனிலேயே யூடியூப் வீடியோவினை MP3 யாக மாற்றம் செய்ய ஒரு தளம் வழிவகை செய்கிறது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை(URL) உள்ளிடவும். பின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அடுத்து எந்த போர்மெட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து தரத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.

அந்த சுட்டியை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வீடியோவில் இருந்து ஓடியோவை பிரித்து எடுக்க நாம் எந்த ஒரு மென்பொருளையும் கையாள வேண்டியது இல்லை. இணையத்தில் உதவியுடனே மாற்றம் செய்து கொள்ள முடியும்.

இணையதள முகவரி

Wednesday, April 27, 2011

பேஸ்புக்கில் தற்போது என்ன பிரபலமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள

500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம்.

சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கில் நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது.

இந்த தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தியதும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த வார்த்தைப்பற்றி தற்போது பேஸ்புக்கில் என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நொடியில் அறியலாம்.

இதைத்தவிர செய்திகள், இசை, விளையாட்டு, அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்ற எந்தத் துறை சார்ந்து தேட வேண்டுமோ அந்தத் துறையை தேர்ந்தெடுத்து எளிதாக தேடலாம்.

பேஸ்புக்கில் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி

நமது கலைத்திறனை [ online ] மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள

பெயிண்ட் மூலம் நாம் வரையும் பல ஒவியங்கள் வெளியே தெரியாமலே இருந்து விடுகிறது. இந்த குறையை தீர்ப்பதற்காக ஓன்லைன் மூலம் நாம் வரையும் ஒவியத்தை எளிதாக உலகறியச் செய்யலாம்.

கணணியில் பெயிண்ட் மூலம் படம் வரைந்து கொண்டிருக்கும் நண்பர்களின் முகங்களை வெளியே கொண்டு வரும் ஒரு புதிய முயற்சியாக ஓன்லைன் மூலம் நாம் வரையும் படங்களை இலவசமாக வெளிக் கொண்டு வருகிறது ஒரு தளம்.

இந்தத் தளத்திற்கு சென்று நாம் எந்த வகை பிரஷ் எந்த அளவில் வேண்டுமோ அதையும், விரும்பிய வண்ணத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு படம் வரையத் தொடங்கலாம்.

படம் வரைந்து முடித்த பின் Save & Tweet என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து வரும் திரையில் உங்களின் டிவிட்டர் கணக்கை திறந்து நாம் வரைந்த புகைப்படத்தை இந்த தளத்திலும் நம்முடன் டிவிட்டரில் இருக்கும் நண்பருக்கும் தெரியப்படுத்தலாம்.

யாருக்கு தெரியும் நாம் வரையும் கிறுக்கல்கள் கூட சிலருக்கு பயன்படலாம். உங்களுக்கும் உலக அளவில் நண்பர்கள் கிடைக்க உதவியாக இருக்கும்.

இணையதள முகவரி

Tuesday, April 26, 2011

DIGITAL EXPRESS

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு!

உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப்படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம்.

ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரிந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com.

இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத் தொடங்கலாம்.

விளையாடுவதற்கு முன்னர், உங்கள் லெவல் என்னவென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின்னர் விளையாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் மாற்றிக் கொடுக்கப்படும்.

குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டுபிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும்.

சொல் முழுவதும் கிளிக் செய்துவிட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப்பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச் சென்று, இறுதியில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்டப்படும்.

இதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்புகளையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது.

கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

அனைத்து கணணியிலும் எது இருக்கோ இல்லையோ கணணி விளையாட்டுகள் மட்டும் தவறாமல் இருக்கும்.

கீழே தரப்பட்டுள்ள நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. Free Game Pick: இந்த தளத்தில் 100% அனைத்து விளையாட்டுக்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை.

இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தளத்தில் ஓன்லைனில் விளையாடும் வசதியும் உள்ளது. பல நூறு விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் தரவிறக்கம் செய்வது சுலபமாக உள்ளது.

இணையதள முகவரி

2. Game Top: இந்த தளத்திலும் விளையாட்டுக்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. மனதிற்கு விருப்பமான நிறைய விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன.

இந்த தளத்திலும் ஓன்லைனில் விளையாடும் வசதி காணப்படுகிறது. இந்த தளத்திலும் விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளமும் உங்கள் விருப்பமான தளமாக இருக்கும்.

இணையதள முகவரி

3. My Play City: மேற்கூறிய இரண்டு தளங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள் இதற்கும் பொருந்தும். ஓன்லைனில் விளையாடும் வசதி இதற்கும் உண்டு. தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து விளையாடலாம்.

இணையதள முகவரி

4. Free ride games: தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவி விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்து மகிழலாம்.

இணையதள முகவரி

DIGITAL EXPRESS

பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க

தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் எந்தவொரு பென்ட்ரைவையும் கணணியுடன் இணைக்கும் பொழுது, இந்த மென்பொருளானது அதுவாகவே பென்ட்ரைவை ஸ்கேன் செய்து விடும்.

கணணியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்தும். (முக்கியமாக Autorun.inf). உங்கள் கணணியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தாலும் அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

Monday, April 25, 2011

DIGITAL EXPRESS

கைத்தொலைபேசிகளுக்கான இலவச  மென்பொருட்கள்  


இன்றைய தகவல் பரிமாற்ற உலகில் கைத்தொலைபேசிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்போதெல்லாம் கைத்தொலைபேசிகளிலே அத்தனை வசதிகளையும் உட்புகுத்தி வருகிறார்கள். இவ்வாறு வசதிகள் அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளுக்கான ஆபத்துக்களும் அதிகரிக்கின்றன.

அவ்வாறான ஆபத்துக்களில் ஒன்றுதான் வைரஸ். இவற்றில் இருந்து புதிய வகை தொலைபேசிகளுக்கு(Smart Phone ) பாதுகாப்பளிக்க ANTI VIRUS மென்பொருட்கள் உள்ளன.

AVG ANTI VIRUS: தரவிறக்க சுட்டி

KASPERSKY MOBILE SEURITY: தரவிறக்க சுட்டி

DIGITAL EXPRESS



ணினியில் USB Port இணை disable செய்வது எப்படி?


USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
RUN—–>TYPE ” regedit ”
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetServicesUsbStor

மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் “4″ என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை (“3″) நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .

on line மூலம் இலவசமாக [Typewriting] கற்க புதிய இணையத்தளம்



on line மூலம் இலவசமாக [Typewriting]  கற்க புதிய இணையத்தளம்   
keybr.com