ஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள்
வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.citrify.com
இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால் படம் 1-ல் காட்டியபடி வரும் இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save
என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக்கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடிட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


No comments:
Post a Comment