முகப்பு

Monday, November 19, 2012

பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

             பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
                              எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.

படம் 1
  
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
  தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.


படம்2

படம் 3

படம் 4

இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.

Saturday, November 10, 2012

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.

கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

தறவிரக்க முகவரி : http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி  அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.