முகப்பு

Friday, September 30, 2011

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க


இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


 இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.

எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.


Sunday, September 25, 2011

மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.

இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது Cloud Computing. கணினியில் உள்ள  ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம் தகவல்களை  சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல்  போகலாம் இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தறவிரக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான இந்தப்பதிவு.


                                                                        படம் 1
நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும்  பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : https://www.cx.com

ஆன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுனங்கள் தற்போது Cloud Hosting  என்று சொல்லக்கூடிய மேகக்கணினி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து  கொள்ளலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை,விண்டோஸ், மேக்,  அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல்  மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஆன்லைன் மூலம்  சேமிக்கலாம். ஒவ்வொரு  நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தறவிரக்கலாம் ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை  என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாம தெரியும்  இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேகக்கணினி என்ற பெயர் இதற்கு வந்தது என்று. இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம்  கொடுக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு  நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில்  பாதுகாப்பாக வைக்கலாம். கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, September 20, 2011

மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder மற்றும் Size வாரியாக பிரிக்க உதவும் மென்பொருள்.

மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான் இப்படி இருக்கும் மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

                                                                         படம் 1

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://bkprograms.weebly.com/downloads.html

இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கலாம். தறவிரக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.Destination  Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து, அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split  என்பதை சொடுக்கினால் போதும் உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம். கண்டிப்பாக பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக பிரிக்க  விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Friday, September 9, 2011

உலகின் முக்கிய பிரபலங்களின் தகவல்களையும் தேடிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது  இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

                                                படம் 1