முகப்பு

Tuesday, May 31, 2011

கணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4


Advanced System Care 4கணிணியில் அன்றாட வேலைகளை மட்டுமே செய்கின்ற பலருக்கு கணிணியை எப்போதும் மேம்பட்டதாக வைத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லதாக பார்த்து கணிணி வாங்கியிருந்தாலும் இப்போது மெதுவாக இயங்குகிறது என்று வருத்தப்படுவார்கள். ஏன் என்றால் கணிணியில் தேங்கும் பிரச்சினைகளை நாம் கண்டறிந்து சரிசெய்வதில்லை. ரெஜிஸ்ட்ரியில எதாவது பிரச்சினையா, ஷார்ட்கட் பிரச்சினையா, கணிணியில் நமக்குத் தெரியாமல் எதாவது அமைப்புகள் மாறியிருக்கிறதா போன்றவற்றை எளிதாக நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள் தான் Advanced system care. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 4 ம் பதிப்பு வந்துள்ளது. இதில் பல வசதிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

1.கணிணியைப் பாதுகாக்கும், சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும் இதன் தொழில்நுட்ப நிரல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2.இதன் புதிய இடைமுகம் கண்ணைக் கவருகிறது. மேலும் அழகான ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன.
Advanced System Care 4
3. Turbo Boost Mode – இது உங்கள் கணிணியின் பின்புலத்தில் இயங்கும் தேவையில்லாத புரோகிராம்கள், சர்விஸ்கள் போன்றவற்றை ஒரே கிளிக்கில் நிறுத்தி இயங்கும் RAM நினைவகத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால் கணிணி வேகமாகும்.
Advanced System Care 4
4. ஒரே கிளிக்கில் கணிணியின் 10 பொதுவான பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்க்கும். (Malwares, privacy sweep, shortcut fix, registry fix, junk files, system optimize)

5. மால்வேர்கள் எதேனும் இருந்தாலும் அவற்றையும் நீக்குகிறது.

6. டாஸ்க் பாரில் கணிணியின் செயல்பாடுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். புதியதாக ஏதெனும் சிக்கல் வந்தால் டாஸ்க் பாரில் காட்டிவிடுகிறது. அதனைக் கிளிக் செய்தால் சிக்கல்களை நிவர்த்தி செய்துவிடும்.
Advanced System Care 4
கணிணியை வேகப்படுத்த அவசியம் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் ஆகும்.

Sunday, May 29, 2011

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்கவும் . நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்கவும்  செய்கிறது. இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

R-Linux Recovery



இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.

பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...

தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Sequrity




Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf”  மற்றும்  “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.

தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity 

Friday, May 27, 2011

கணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup


கணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து வைக்கிறோம்? 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

Easeus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது. கணிணியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம் (Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது. இது கணிணி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.


இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :

1. கணிணியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணிணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட டிஸ்கின் மூலம்
மொத்தத்தையும் மீட்க முடியும்.

2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.

3. Incremental Backup – இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப் பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.

4. இதிலிருந்து சிடி, டிவிடி, பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.

5. Backup Schedule – இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.


6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் (Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.

7. தற்போதைய ஹார்ட் டிஸ்கின் அனைத்தையும் நகலெடுத்து (Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்
தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது
வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு
பயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்
மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,

1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற
மொழிகளிலும்
செய்யல்படுகிறது.
7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.

இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.

Internet Explorer பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites
என்பதை சொடுக்கவும்.


2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு
கீழே அமர்ந்து விடும்.


இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.




Firfox பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.


2. Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை :

உங்கள் உலவியில் உள்ள [ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால்
கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில்
உள்ள எந்த உரைப்பெட்டியிலும் என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.



மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை
சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.

Thursday, May 26, 2011

இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்டிவைரஸ் நீட்சிகள்


இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது, இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. என்னுடைய கணிணியிலும் ஒருமுறை எதோ வெப்சைட்டில் நுழையப்போய் பல வைரஸ்கள் ஊடுருவியதில் சிக்கலாகிப் போய்விட்டது. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும். அதுவும் இண்டர்நெட் பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணிணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.

நீங்கள் இணையத்தில் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லும் போது அந்த தளம் பாதுகாப்பானதா என்று தெரிந்தால் நல்லது. இல்லாவிட்டால் பலிகொடுக்க வேண்டியது தான். இதைத் தான் URL Scanning என்று சொல்வார்கள். உங்களிடம் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள் இந்த Internet Sequrity விசயத்தைத் தராமல் இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பாக எப்படி இணையத்தைப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் எழலாம்.

இணைய உலவிகளுக்கென BitDefender ஆண்டிவைரஸ் நிறுவனம் TrafficLight என்றொரு நீட்சியை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் நீட்சியை நாம் பயன்படுத்தும் உலவியில் சேர்த்துக் கொண்டால் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. நீங்கள் வேறெந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இதனைத் தாராளமாக பயன்படுத்தலாம். இதன் அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.


1. விண்டோஸ் கணிணியின் எந்த உலவியையும் ஆதரிக்கிறது. இதற்கு தனிப்பட்ட உலவியைச் சார்ந்து நிறுவாமல் விண்டோஸ் கணிணிக்கு என்று (Windows Installer) நிறுவிக் கொண்டால் உங்கள் கணிணியில் எந்த உலவிக்குச் சென்றாலும் இயங்கும் ( Firefox, opera, IE, Safari, Chrome)

2. நீங்கள் எந்த ஒரு இணையதளத்தையும் அடையும் முன்னரே பாதுகாப்பானதா என்று சோதித்து சொல்லிவிடுகிறது.

3. கூகிள் தேடலைப் பாதுகாப்பானதாக செய்கிறது. கூகிள் தேடலின் போது வரும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் முன்பாக அது பாதுகாப்பான தளமாக இருந்தால் பச்சை நிறத்தில் டிக் செய்யப்பட்டு காட்டுகிறது.

4. இணையத்தில் மால்வேர் மற்றும் போலியான தளங்கள் (Phishing Websites)
போன்றவற்றை முன்கூட்டியே எச்சரிக்கிறது. Phising Sites - சில தளங்கள் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் தளம் போலவே தோற்றமளித்து உங்களின் தகவலையும் பணத்தையும் திருடுவார்கள்.

5. சமுக வலைத்தளங்களில் உள்ள அபாய பக்கங்களையும் எச்சரிக்கிறது.

6. ஒருவேளை குறிப்பிட்ட இணையதளத்தின் சில பக்கங்கள் தீங்கின்றி இருந்தால் அதை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது.

விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயல்படுகிற இந்த நீட்சி அருமையான பயன்படுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

Wednesday, May 25, 2011

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும்.

Monday, May 23, 2011

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyboard shortcuts)

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.

கீழே உள்ள அட்டவணையில் Firefox, Chrome, Internet explorer, Safari போன்ற ஒவ்வொரு வலை உலவிக்கும் தனித்தனியே குறுக்கு விசைத் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நமது நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தலாம்.

Facebook keyboard shortcuts


Function
Chrome/Opera/Safari
Firefox
Internet Explorer
Search
Alt+?
Alt+Shift+?
Alt+?+Enter
Compose New Message
Alt+M
Alt+Shift+M
Not Working
Goto Homepage
Alt+1
Alt+Shift+1
Alt+1+Enter
Go to Profile Page
Alt+2
Alt+Shift+2
Alt+2+Enter
Friend Requests
Alt+3
Alt+Shift+3
Alt+3+Enter
Open Messages
Alt+4
Alt+Shift+4
Alt+4+Enter
Notifications
Alt+5
Alt+Shift+5
Alt+5+Enter
My Account Page
Alt+6
Alt+Shift+6
Not Working
Choose Your Privacy Settings
Alt+7
Alt+Shift+7
Not Working
Facebook’sFacebook page
Alt+8
Alt+Shift+8
Alt+8+Enter
Facebook Terms & Conditions
Alt+9
Alt+Shift+9
Alt+9+Enter
Facebook Help Center
Alt+0
Alt+Shift+0
Alt+0+Enter

வின்டோஸ் 7 க்கு அழகான ராஸ்க் பார்


மேலுள்ளவாறு அழகான ராஸ்க் பார் உங்கள் வின்டோஸ் 7 க்கு வேண்டுமா? தொடர்புடைய ஐகோன்களை ஒன்றினைத்து கொள்ளவேண்டுமா? படத்தில் காட்டப்பட்டவாறு குறூப் ஐகோன்களுக்கு மேலால் மவுஸை கொண்டு செல்லும்போது அவற்றின் shortcuts தெரியவேண்டுமா? உங்கள் files and folders ஐ ராஸ்க் பாரில் pin பண்ண வேண்டுமா? இவை அனைத்தையும் செய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Bins.5,633 KB அளவுடையது. Beta பதிப்பு தற்போது இலவசமாக கிடைக்கிறது.
 

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் [4 வகையாக பிரித்து பார்க்கலாம்]

 நாம் ஒரு கணினித்திரையில் அதிகளவு ஐகோன்களை சேமித்து வைத்துவிட்டு அவசரத்தில் அவற்றுக்குள் தேவையானதை தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுவோம்.அத்துடன் ஒரே மாதிரியான கணினித்திரையை எத்தனை நாள் பார்ப்பது. சற்று வித்தியாசமாக நாம் வேர்ச்சுவலாக 4 பகுதிகளாக பிரித்து அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை அப்ளிகேசன்களை இட்டு அழகு பார்ப்போமா?

இவ்வாறு மாற்றி பார்க்க ஒரு மென்பொருள் உதவுகிறது .அதன் பெயர் Desktops v1.02. 60KB. தரவிறக்க . தரவிறக்கி நிறுவும்போது உங்கள் ஏற்றுக்கொள்கையின் பின் பின்வருமாறு configuration box வரும்.
இதில் சிவப்பு வட்டமிட்ட பகுதியில் நீங்கள் விரும்பிய குறுக்கு வழியை தெரிவு செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். அவ்வளவுதான் முதல் படத்தில் சிவப்பு அம்புக்குறியிட்டு காட்டியது போல் உங்கள் Task bar ல் புதிய ஐகோன் தென்படும். தற்போது அதன் மேல் கிளிக் பண்ணி உங்களுக்கு Alt+1,Alt+2,Alt+3,Alt+4 குறுக்கு வழிகளை பிரயோகிக்கும் போது தெரியவேண்டிய கணினித்திரையை வடிவமைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான். இதில் என்னுமொரு பயன் உள்ளது தெரியுமா? ஒரு திரையில் திறந்துள்ளவற்றை என்னொரு திரையில் பார்க்க முடியாது. அதாவது அலுவலகத்திலோ வீட்டிலோ மற்றவர் கண்களுக்கு தெரியாத படி நீங்கள் விரும்பியவற்றை பார்க்கலாம்.யாராவது வேண்டாதவர்கள் வருகிறார்கள் என்றால் மறைத்து விட்டு வேறு திரையில் பணியாற்றலாம்.

Friday, May 20, 2011

கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!


கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம்.

கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.

1 . Avast Antivirus


முதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன.

எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது.


எந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம் தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு செய்திடலாம்.
தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download
பதிவு செய்ய : http://www.avast.com/registration-free-antivirus.php

கட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன் கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.

2 . USB Disk Sequrity


வைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம்.

autorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு குறைகிறது.

தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html (இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும் உள்ளது)

3. WinPatrol


இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது.

பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன.


மேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள், Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்க முடியும்.

தரவிறக்கச்சுட்டி : http://www.winpatrol.com/download.html

இந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்!

Thursday, May 19, 2011

மைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் லேப்டாப்


கணிணி மற்றும் மென்பொருள்கள் சந்தையின் முதல்வரான மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ்க்கு இது போதாத காலம் போல. கூகிள் நிறுவனத்தால் இணைய வர்த்தகம் மைக்ரோசாப்டுக்கு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் மென்பொருள்கள் சந்தையிலும் அடிவிழப் போகிறது. கூகிளின் புதிய இயங்குதளமான குரோம் (Chrome OS Notebooks) இப்போது லேப்டாப்களில் பொதிந்து விற்பனைக்கு தயாராகிவிட்டன.

மேகக் கணிணியகம் என்று சொல்லப்படும் Cloud Computing முறையில் குரோம் இயங்குதளம் செயல்படப் போகிறது. சரி இதனால் மைக்ரோசாப்டுக்கு என்ன பாதிப்பு என்று பார்ப்போம். மைக்ரோசாப்டின் முக்கிய மென்பொருளான MS-Office விண்டோஸ் இயங்குதளத்தில் செயலபடக்கூடியது. உலகெங்கும் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆபிஸ் தொகுப்பால் மைக்ரோசாப்டுக்கு வருமானம் பல கோடிக்கணக்கில் கிடைக்கிறது.

MS-Office தொகுப்பைப் பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளம் வேண்டும். இதிலும் வருமானம் வருகிறது. ஆனால் குரோம் லேப்டாப்பில் இயங்குதளம் தேவையில்லை. தனிப்பட்ட மென்பொருள்கள் தேவையில்லை. குரோம் வலை உலவியின் பெயரால் வந்திருக்கும் குரோம் இயங்குதளம் ஒரு இணைய மேடையாக (Google Web Platform) செயல்படுகிறது.


”எப்போதும் இணையத்திலேயே இருங்கள்” இதைத்தான் கூகிள் சொல்கிறது. MS-Office தொகுப்புக்கு மாற்றாக இருக்கவே இருக்கிறது Google Docs. இதன் மூலம் ஆன்லைனில் எப்போதும் ஆபிஸ் தொகுப்புகளைப் பயன்படுத்த முடியும். சர்வர் பிரச்சினை எதுவுமே இருக்காது. மேலும் உங்களின் முக்கிய கோப்புகளை ஆன்லைனில் பயன்படுத்தும் போது அவற்றிற்கு பாதுகாப்பு அதிகம். வைரஸ் பிரச்சினை, கணிணி கிராஷ் போன்றவற்றால் உங்கள் கணிணியில் ஏற்படும் பிரச்சினைகள் ஆன்லைனில் இல்லை. முக்கியமான விசயம் என்னவென்றால் இதில் ஆண்டிவைரஸ் தேவையில்லை என்பதே.

மேலும் ஆபிஸ் தொகுப்பை மட்டும் வைத்து விட்டால் போதுமா? கணிணியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் போன்ற அனைத்து முக்கியமான மென்பொருள்களும் விளையாட்டுகளும் போட்டோ எடிட்டர் போன்ற பயன்பாடுகளும் கூகிளின் Chrome Store இல் வழங்கப்படுகின்றன.HTML5 மற்றும் WebGL போன்ற உயரதர தொழில்நுட்பத்தால் இணையத்தில் மேம்பட்ட வேலைகளை வேகமாக செய்யமுடியும். Adobe Flash Player இல்லாமலே WebGl தொழில்நுட்பத்தால் இணையத்தில் நன்றாக படங்களைப் பார்க்க முடியும்.


இதனால் பல பெரிய நிறுவனங்கள் இணைய இணைப்பை வைத்திருந்தால் போதும். அவை விண்டோஸ், MS-Office போன்றவை இல்லாமல் அந்த காரியங்களைச் செய்து கொள்ள முடியும். விண்டோஸ் மற்றும் ஆபிஸ் தொகுப்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

இண்டெல் நிறுவன புராசசரில் செயல்படும் குரோம் இயங்குதள லேப்டாப்களை ACER மற்றும் SAMSUNG நிறுவனங்கள் தயாரித்துள்ளன. வெறும் 8 வினாடிகளில் கணிணி பூட் ஆகி இயங்குதளத்தில் நுழைந்து இணையத்திற்கு கொண்டு செல்லும் என கூகிள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இப்போது கலக்கத்தில் இருக்கின்றன. இதன் வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங்கள்


தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை மொபைலில் பயன்படுத்தும் படியாக உள்ளது. இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என மொபைல் துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் மொபைல் துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண மொபைல் போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர்.

மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.

1. GetJar

மொபைல் பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
http://getjar.com

2.Mobile9.com

இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும் பயன்பாடுகளைப் பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள் உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers, Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான பயன்பாடுகளும் ஒடிவரும்.
http://mobile9.com

3.Nokia OVI Store

இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
http://store.ovi.com

4. Android Market

கூகிளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
http://market.android.com

ஆண்ட்ராய்டு மார்க்கெட் அல்லாமல் சில தளங்களும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. உபயோகமான சில தளங்கள்.
http://www.freewarelovers.com/android
http://freeandroidapplications.net/
http://www.androidfreeware.net/

5. Microsoft Windows Mobile OS

மைக்ரோசாப்டின் மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
http://marketplace.windowsphone.com

விண்டோஸ் பயன்பாடுகளை தரவிறக்க மைக்ரோசாப்டின் மார்க்கெட் தளத்தை விட சிறப்பான இணையதளம் மற்றொன்று இருக்கிறது.
http://www.freewarepocketpc.net/

6.Apple Store

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://store.apple.com/us

இதைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன். ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப் பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்.

எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்



கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.





Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.





இந்த மென்பொருள் என்ன செய்கிறது ?



இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.







இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.



எப்படிப் பயன்படுத்துவது?



1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button



2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.



3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.



4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.



5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel



6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1





7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.



இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை

Connected Clients இல் பார்க்க முடியும்.



இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.



இறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.



தரவிறக்கச்சுட்டி : Download Connectify

Sunday, May 15, 2011

விண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை.

ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட வேலைகளைச் செய்ய முடியும்.

1. Access system recovery option,
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues

இந்த டிஸ்க் மூலம் நீங்கள் பூட் ஆகாத கணிணியில் போட்டு Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவும் கடினமான வேலையே இல்லை.

மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பது, பொதுவாக ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது. மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.


பூட் ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.

இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே சிடி/டிவிடியில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு எழுதிக் கொள்ளுங்கள். (Cd Writing) . ஐஎஸ்ஒ கோப்புகளை சிடியில் எழுதுவதற்கு ImgBurn மென்பொருள் கொண்டு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

இந்த டிஸ்க் எந்த நிறுவனத்தின் கணிணிகளிலும் விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.

தரவிறக்கச்சுட்டி :
Download via Torrent 32 Bit | 64 Bit (143 Mb only)



விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transformation Pack


விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8 ஐ அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த பதிப்பு வெளியிடப்படும் என்று
சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை Transformation Pack ஆக உருவாக்கி விட்டார்கள்.

Transformation Pack என்பது ஒரு இயங்குதளம் அல்ல. குறிப்பிட்ட இயங்குதளத்தைப் போல தோற்றத்தையும் பயனர் இடைமுகத்தையும் (Graphical User Interface) தற்போதுள்ள இயங்குதளத்திற்குத் தருகிறது. மேலும் இது ஒரு இயங்குதளத்தின் அப்டேட் அல்ல. இதைப் போட்டால் இயங்குதளம் அப்டேட் செய்யப்படாது என்பதையும் அறிய வேண்டும்.


இந்த மென்பொருள்களின் மூலம் தற்போதுள்ள இயங்குதளத்திலிருந்து எந்த ஒரு இயங்குதளத்தின் தோற்றத்தைப் போலவும் மாற்ற முடியும். ( Windows to Linux
distributions, Mac Os) இந்த மென்பொருளை நீக்கிவிட்டால் பழைய தோற்றம் கிடைத்துவிடும்.

விண்டோஸ் 8 இன் தோற்றத்தை அதன் பதிப்பு வெளியிடப்படும் வரை காத்திருக்காமல் உங்கள் கணிணியில் காண்பதற்கு ஆசையிருந்தால் இதன் மூலம் பயன்படுத்தலாம்.


இதை நிறுவும் முன் உங்கள் கணிணியில் இருக்க வேண்டியவை.

1. கணிணியின் இயங்குதளம் விண்டோஸ் 7 Service Pack1 ஆக இருக்க வேண்டும்.
2. இந்த மென்பொருள் 32 bit மற்றும் 64 bit இரண்டிலும் செயல்படும். இருந்தாலும் 32 பிட்டில் சிறப்பாக செயல்படும்.
3. கணிணியில் டாட் நெட் பிரேம்வொர்க் ( Dot Net Framework 4.5 ) நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இதனை நிறுவும் முன்னர் கணிணியில் System Restore point அமைத்துக் கொள்வது நல்லது. இதற்கு Control panel -> System->System Protection->Create செல்லவும். நிறுவிய பின்னர் எதேனும் சிக்கல் என்றால் எளிதாக மீட்டுக் கொள்ள முடியும்.

தரவிறக்கச்சுட்டி : Download Windows 8 Transformation pack

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த Game Booster


கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில நேரங்களில் தொக்கி நிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணிணியின் டிஸ்பிளெ மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.

இப்படி கணிணியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இதற்கெல்லாம் எங்கே போய் டவுன்லோடு செய்வது , எங்கே போய் மாற்றியமைப்பது போன்ற சிக்கல் மிகுந்த வேலைகளை எளிதாக்குகிறது GameBooster என்ற மென்பொருள். இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும். இந்நிறுவனத்தின் மற்றொரு முக்கிய மென்பொருள் Advanced System Care பற்றி அறிந்திருப்பீர்கள்.

இந்த மென்பொருள் என்ன செய்கிறது?

1.ஒரே கிளிக்கில் கணிணியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.


2. கணிணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது. (Hardware updates)

3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். (Extra Improving Softwares)

4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணிணியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)

5. விளையாட்டு அடங்கியுள்ள போல்டர்களை Defragment செய்கிறது. (Defragmenting games)

6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. (Stops unnecessary programs)

7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது. (Cleans RAM)

8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது. (Improving Processor performance)

9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம். (Mouse, Keyboard, Joystick)
விளையாடி முடித்ததும் Gaming Mode ஆப் செய்து விட்டு கணிணியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இந்த மென்பொருள் இலவசமானதாகும். விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.

தரவிறக்கச்சுட்டி: Download IoBit Gamebooster 2.0

பயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்

பயர்பாக்ஸ் (Firefox) வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பாக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.

1.பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல் (Erase History)

நீங்கள் வலை உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும் ஏற்படுத்தப் படுகிற குக்கிகளும் அதிகமாக சேர்ந்து விடுவது பயர்பாக்சின் வேகத்தைக் குறைக்கலாம். அதனால் அடிக்கடி Clear History கொடுத்து வரலாறை நீக்கி விடுங்கள். Tools->Options சென்று இதனைச் செய்யலாம்.

2.புக்மார்க்குகளை குறைத்தல் (Reduce Bookmarks)

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்பர். இது பின்னாளில் எளிதாக அந்த இணையதளத்தை அணுக உதவியாக இருக்கும். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் புக்மார்க்குகள் சேர்ந்து விடுவது பயர்பாக்ஸ் ஆரம்பிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே முக்கிய இணையதளங்களை மட்டும் வைத்துக் கொள்வது நலமானது.

3.ஆட் ஆன் தொகுப்புகள்

பயர்பாக்சின் சிறப்பே அதன் ஆட் ஆன் தொகுப்புகள் தான். ஆட் ஆன் தொகுப்புகள் உலவிக்கு மேம்பட்ட சிறப்பைக் கொடுக்கிறது. பல வேலைகளுக்குப் பயன்படும் ஆட் ஆன் தொகுப்புகளும் அளவான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத ஆட் ஆன் தொகுப்புகளை நீக்கி விட வேண்டும்.

4.Places Database இல் உள்ள தகவல்களை நீக்குதல்

உங்கள் வலை உலவியில் நீங்கள் பயன்படுத்தும் புக்மார்க்குகள், பக்கங்களின் வரலாறு, குக்கிகள் எல்லாமே பயர்பாக்சின் Places என்ற தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். இவற்றை அவ்வப்போது நீக்குவதும் வேகத்தை அதிகப்படுத்தும். இந்த தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை நீக்க ஒரு சிறப்பான ஆட் ஆன் உள்ளது. Vacuum Places என்ற இந்த ஆட் ஆன் பயர்பாக்ஸ் ஆரம்பிக்கும் ஒவ்வொரு 30 வது தடவைக்கும் தானாகவே Places தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை அழித்துவிடும்.