முகப்பு

Wednesday, August 24, 2011

2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம்.

2012 -ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும்  ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்,  பல இடங்களில் குறிப்பாக மாயன் காலண்டர்  கணிப்புபடி 2012 டிசம்பர் 12 -ல் உலகத்திற்கு பாதிப்பு வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக  மகக்ளிடையை பரவிவருகிறது இதைப்பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மாயன் காலண்டர் -ஐ பொருத்தவரை இது அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து  இருக்கிறது, 2012 -ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல் என்று பல பேர் கூறிவருகின்றனர் அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும் இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர் கூறிக் கொண்டிருக்கும்  நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.2012predictions.net

2012 -ஐ மக்கள் , விஞ்ஞானிகள் ,  எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்லலாம், பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை  அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன்  காலண்டர் கூறி உள்ளது எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்ட்ரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை, ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது  என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும்  உள்ளது. இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012 -ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்  விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012 -ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று  கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.

Tuesday, August 16, 2011

பேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம்.

பேஸ்புக் மூலம் கடந்த கால நம் பேச்சு மற்றும் சுவையான  பல உரையாடல்களை எளிதாக மீட்டெடுத்து அன்றைய தினம் இமெயில் மூலம் தெரிவிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

  

சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி
அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.

Thursday, August 11, 2011

வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.

மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


Monday, August 8, 2011

பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.

குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான்  என்றாலும் பெரும்பாலன நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes ) கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது.

Wednesday, August 3, 2011

பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ் ( Tricks ).


சோசியல் நெட்வொர்க் தளமான Facebook  -ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் இந்தப்பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும்  விளம்பரங்களை எளிதாக நீக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது.

இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/eommhojjeeaapcofdjleiamnokcfdnna?hl=en#

குரோம் உலாவியில் மேலே குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம், இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை ,  பேஸ்புக் -ல் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும் ஆனால் இனி எந்த விளம்பர  தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை, ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு  பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.