முகப்பு

Tuesday, April 24, 2012

புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.

நாம் எடுத்த புகைப்படங்களை நம் கணினியில் அல்லது சிடி டிவிடி என்று  ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்திருப்போம், பிளிக்கர் , பிகாசா போன்ற தளங்களை போல் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இந்தத்தளத்தில் நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக பதிவேற்றியும் அதை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்  இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



 புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதற்காகவும் அதை நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட தளம் தான் இந்தத்தளம்.

இணையதள முகவரி :  http://sharypic.com

இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மேல் இருக்கும் Create my account என்பதை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதிவேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த புகைப்படங்களை ஆல்பம் போல் செய்து நம் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனஅனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். பிளிக்கர் பிகாசா போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை கூட நாம் இந்தத்தளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள செய்யலாம். புதுமை விரும்பிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, April 13, 2012

ஆப்பிளின் ஐ-பேட் 3 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம்  புதிய ஐ-பேட்3யை அறிமுகப்படுத்திஉள்ளார்கள். இந்த ஐ-பேட் உயர் வரையறை தொலைக்காட்சியைவிட ( HD TV) 4 மடங்கு வேகமாகவும் 3டி திறனும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஐ-பேடில் 3டி விளையாட்டுக்கள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் படங்களை மிகத்தெளிவாகவும், துல்லியமாகவும் பார்க்க முடியும்.  


ஆப்பிள் ஐ-பேட்-3 ன் சிறப்பு அம்சங்கள்:

* 5 மெகா பிக்சல் கேமரா
* 2084x1536 ரெசொல்யூஷன்
* ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட திரை
* 40 இன்ச் தொலைக்காட்சியைவிட துல்லியமான திரை
* 3டி விளயாட்டுக்கள்
* 4G மொபைல் நெட்வொர்க்குகள்

இந்த ஐ-பேட்கள் 16ஜிபி மெமரியிலிருந்து கிடைக்கும். மேலும் இதில் இணையத்திற்கு மட்டுமேயான பிரத்யோக வை-பை வசதியை கொண்டுள்ளது.

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐ-பேட் 2-யின் அதே விலையில் ஐ-பேட்- 3யும் கிடைக்கும் என கூறப்படுகிறது.  கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 9.25 மில்லியன் ஐ பேட்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.