முகப்பு

Thursday, October 11, 2012

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு


பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info


ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு  விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்

Saturday, October 6, 2012

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://cammster.com

இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.