முகப்பு

Friday, July 29, 2011

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.


வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com

இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு  வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் Download என்று ஒரு பட்டனை   சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Friday, July 22, 2011

நம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் !

Windows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, அது தவிர்ந்த நானறிந்த சில பயனுள்ள மென்பொருட்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக சிறந்த  antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது  spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...

Sunday, July 17, 2011

வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter


கணிணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.

Monday, July 11, 2011

PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?


நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM  காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக  RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை  Pen Drive களின் விலை குறைவானதே. 
முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது  என பார்ப்போம். 

Thursday, July 7, 2011

தற்போது நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீளப் பெறலாம்

ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

restore contacts

Friday, July 1, 2011

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?