பொதுவாக
நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக
சிறந்த antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது
spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...
பின்வரும் இலவச மென்பொருட்கள் Windows personal computer களில் முக்கியமானவையே,
- PC Decrapifier
- Windows Backup and Restore or Macrium Reflect
- Revo Uninstaller
- CCleaner
- Microsoft Security Essentials
- Dropbox or Syncback SE
PC Decrapifier
சில
கணனிகளில், மடிக்கணனிகளில் தேவையற்ற preinstalled மென்பொருட்கள்
காணப்படும், இவற்றை கணனியிலிருந்து அகற்றி கணனியை வேகமாக செயற்படுத்த
வேண்டுமானால் PC Decrapifier
மென்பொருளை நிறுவி தேவையற்றவற்றை நீக்கிக்கொள்ளலாம். இது ஒரு இலவசமான
மென்பொருளாகும். இது வர்த்தக மென்பொருளாகவும் சிறிய விலையில்
கிடைக்கின்றது.
Macrium Reflect
நாம்
புதிதாக கணனியொன்றை வாங்கும் போது அதன் system image ஒன்றை உருவாக்கிக்
கொள்வது கட்டாயமானது. நீங்கள் built-in Windows backup and restore center
யை பயன்படுத்தி இதனை செய்யலாம், ஆனாலும் அனைத்து Windows
இயங்குதளங்களிலும் இது காணப்படாது. சிறப்பான system image முதல்பிரதியை Macrium Reflect இலவச மென்பொருளை பயன்படுத்தி பெறலாம்.
Revo Uninstaller
add/remove
programs களை பயன்படுத்தி கணனியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்ளை
நீக்குவதையே நாம் வழமையாக கொண்டுள்ளோம். ஆனாலும் அதை விடவும் சிறந்த
மென்பொருளே Revo Uninstaller ஆகும்.
CCleaner
CCleaner
என்பது மிகச்சிறந்த ஒரு மென்பொருளாகும். குறிப்பாக தற்காலிக கோப்புகள் ,
தரவுகளை temporary files and data களை அழிக்க பயன்படுத்தலாம், அது
மட்டுமல்லாது மேலும் சில வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Microsoft Security Essentials
viruses,
spyware and malware என்பவற்றிலிருந்து கணனியை பாதுகாத்துக் கொள்வதற்காக
Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்டி வைரஸ் தான் Microsoft Security
Essentials ஆகும்.
Dropbox or Syncback SE
நமது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புகள் அல்லது தரவுகள்
உங்களை
அறியாமலே காணாமல், தொலைந்து அல்லது அழிந்து போயிருக்கும், அவற்றை backing
data up செய்து பாதுகாத்து வைத்திருப்பது சிறமமாக இருந்திருக்கலாம், எனவே
அவற்றை online backup செய்து கொள்ள கூடிய வசதியை Dropbox ,offline sync
மற்றும் Syncback SE போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சேமித்து பாதுகாக்கலாம்.
மேற்குறிப்பட்ட மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கூடியதுடன் நம் கணனிகளில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டிய மென்பொருட்களாகும்.
No comments:
Post a Comment