முகப்பு

Tuesday, November 29, 2011

உங்கள் கணனியில் Task Manager Open ஆகவில்லையா?

 Task Manager ஆனது Inbuit  நிகழ்ச்சி நிரலாக Windows  வழங்கியுள்ள சிறப்பான ஓர் வசதியாகும். இதனை பொதுவாக நம் கணனியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் (Run) விடயங்களை அறிய, சில Task அல்லது Program களை இலகுவாக Start செய்யவும் End செய்யவும்  பயன்படுத்துகின்றோம். மேலும் இதன் மூலம்  RAM, CPU usage மற்றும்  Performance போன்றவற்றை அறியலாம்.  சில கணனிகளில் திறக்க மறுக்கும். இது Virus மற்றும் Trojan தாக்குதல்களினால் Disable செய்யப்பட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான Error Message வரக்கூடும்.


இதனை சரிசெய்ய பல முறைகள் காணப்படுகின்றன. அதிகமானோர் இதனை அறிந்திருந்தாலும் அறிந்திறாதோருக்காக இப்பதிவை பகிர்கின்றேன். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

01. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் gpedit.msc என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
  • பின் Group Policy Editor இல்                

User Configuration  சென்று Administrative Template என்பதில்  System தெரிவு செய்து Ctrl + Alt + Del Optionஎன்பதை  Click செய்யுங்கள்.

அங்கு Remove Task Manager என்பதை Double Click செய்து
அதில் Not Configured என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.

02. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் regedit என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.

  • பின் அதில்
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
அதன் வலப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள DisableTaskMgr என்பதில் Right Click செய்து Delete செய்யுங்கள் பின் அதனை Confirm செய்து விடுங்கள்.
 
03. முறை
Task Manager Fix ஐ தரவிறக்கம் செய்து Run ( Double Click) செய்யுங்கள்

நீங்களும் Task Manager யை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

Tuesday, November 22, 2011

டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எதுவென்று தெரியாமல் நமக்கு பயன்படாமலே இருக்கும், சிறந்த டிஜிட்டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


 

ஒரு நாட்டில் கிடைக்கும் கேமிராக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://snapsort.com

புகைப்படம் எடுப்பதற்காக கேமிரா வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையை சொல்லி அதற்கான கேமிராவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம் தான்.  என்ன தேவைக்காக பயன்படுத்த போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க  வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின்  கேமிராவை காட்டும் ஒவ்வொரு கேமிராவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறுவத்தின் கேமிராவுடன்  ஓப்பிட்டும்  காட்டும்.தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான  கேமிராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், சில கேமிராக்களின்  செயல்படும் வீடியோ கூட இத்தளத்தில் காட்டப்படுகிறது. சரியான விலையில் திறமையான கேமிரவை தேர்ந்தெடுக்க விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, November 15, 2011

நம் கணினியில் திறக்காத கோப்புகளின் முழுவிபரங்களையும் அறிய உதவும் பயனுள்ள தளம்.

பலவகையான கோப்புகளை திறக்க நம் கணினி துணை புரிந்தாலும் சில  வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது  என்ற சந்தேகம் வரலாம் காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம் இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம்  மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம்  உள்ளது இதைப் பற்றித்தான்  இந்தப்பதிவு.



பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள் (File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம்  உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.fileinfo.com

இத்தளத்திற்கு சென்று நம் கணினியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும் அடுத்து வரும்  திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ  வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர், உதாரணமாக ஒரு வீடியோ  கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files  என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த  மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தறவிக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கணினியில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் அனுபவசாலிகள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, November 5, 2011

அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).

வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு ஃபார்மெட் -ஐ மற்றொரு ஃபார்மெட் ஆக மாற்ற எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


                                                                       படம்1
ஆன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும் தான் மாற்றிக்கொடுக்கின்றன ஆனால் நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்.

இணையதள முகவரி : http://www.clipconverter.cc

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Media URL: இருக்கும் கட்டத்திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம் அல்லது Upload  file என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue என்ற  பொத்தானை சொடுக்கி அதன் பின் படம் 1 -ல் காட்டியபடி நமக்கு எந்த ஃபார்மெட்-ல் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து  சொடுக்கி தறவிரக்கலாம்,   நேரடியாக வீடியோவை தறவிரக்க வேண்டுமானால் Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவை தறவிரக்கலாம், வீடியோ ஃபார்மெட் -ஐ ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற விரும்பும் மற்றும் யூடியுப் வீடியோவை தறவிரக்க நினைக்கும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.