முகப்பு

Tuesday, February 28, 2012

நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய தினங்களை ஞாபகப்படுத்தும் புதுமையான தளம்.

நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த  நாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான் இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

 
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்  மறந்துவிட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்த நாள்  மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://live.ss-birthdayreminder.com

இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு  இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து நம்  நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய  தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் செல்லப்பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட  தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு இமெயில் மூலம் ஞாபகப்படுத்தும்  நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லுங்கள் என்று நம்  இமெயிலில் செய்தி வரும். அதன் பின் அலைபேசியிலோ அல்லது  மெயில் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக  இருக்கும். நம் பிறந்த நாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால்  அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம்.மறதியான நமக்கு இது போன்ற தளங்களின் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, February 14, 2012

மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்

அலைபேசி என்று சொல்லக்கூடிய Mobile Phone இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போனில் நாம் விரும்பும் ரிங்டோன் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.




விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இணையதள முகவரி : http://www.musetips.com/free-ringtone-maker.html

இத்தளத்திற்கு சென்று நாம் Download என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம், தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும் Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எதில் இருந்து எதுவரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Save Ringtone to My Computer என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் சேமிக்கலாம். ரிங்டோன் உருவாக்க விரும்பும் நம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Friday, February 3, 2012

புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.

புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

 

                                                               படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.jpegmini.com/main/shrink_photo

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் அளவை குறைப்பதைவிட இது பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் இத்தளத்தை சோதித்து பார்த்து வியந்துவிட்டோம்  உடனடியாக நாம் எடுத்து 3.13MB Size கொண்ட புகைப்படத்தை வெறும் 898 KB ஆக மாற்றியது தரத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இனி எப்படி இத்தளத்தை பயன்படுத்துவது என்று பார்ப்போம். இத்தளத்திற்கு சென்று Upload your photo என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டியது மட்டும் தான் நம் வேலை, அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றிய புகைப்படத்தின் வலது பக்கம் இருக்கும் JPEG Mini என்பதை சொடுக்கி விட்டு  புகைப்படத்திற்கு அடியில் இருக்கும் Download Photo என்பதை சொடுக்கி புகைப்படத்தை தறவிரக்கலாம்.Picasa மற்றும் Flickr இருக்கும் புகைப்படங்களை கூட நாம் எளிதாக தரம், அளவு குறையாமல் எடையை மட்டும் குறைத்து தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.