முகப்பு

Tuesday, October 25, 2011

USB PEN Drive , மெமரி கார்டு – ஆயுளை அதிகரிக்கும் பயனுள்ள இலவச மென்பொருள்.

நாம் பயன்படுத்தும் USB பெண்டிரைவ்-களின் தகவல்களை பாதுகாக்கவும் பெண்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


நல்ல நிறுவனத்தின் பெண்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன் ஆனால் சில நேரங்களில் இந்த பெண்டிரைவ்-ல் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு மென்பொருள் வந்துள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.usbalert.nl/usbalert/download.php

இத்தளத்திற்கு சென்று Setup (install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கவும் தறவிரக்கி மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.நம் கணினியில் பெண்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும் அடுத்து பெண்டிரைவ்-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பெண்டிரைவ்-ஐ வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பெண்டிரைவ்-ன் ஆயுட்காலாமும் தகவலும் பாதுகாப்பாக சேமிகப்பட்டிருக்கும்.விண்டோஸ் Xp முதல்  விண்டோஸ் 7 வரை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, October 16, 2011

குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்ல
சில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்
கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு இணையதளம்
உள்ளது. இதைப்பற்றி தான் இந்தப்பதிவு.


இணையதள முகவரி :  http://www.carrotsticks.com

கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்
எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்
வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்
மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்
நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் இணையதளம்
வந்துள்ளது. எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகை
என்று இரண்டாக பிரித்துள்ளனர். இதில் நமக்கு எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியான பதில் அளித்தால்
உடனடியாக மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். பயனாளர் கணக்கு
உருவாக்க தேவையில்லை , புதிய பயனாளர் கணக்கு தங்கள்
பெயரில் உருவாக்கி நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அடுத்தவரிடம்
காட்டலாம். பேஸ்புக்கிலும் உங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து
கொள்ளலாம்.

Wednesday, October 12, 2011

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்க

இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும்
கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன்
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

.
கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை ,
கணிதம் முதல்  கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான
புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://sciencebooksonline.info


                                                              படம்1
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வலது பக்கத்தின் மேல்
இருக்கும்  எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான
மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை
இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்
தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி
நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.கல்லூரி மாணவர்கள்,
ஆராய்சியாளர்கள், பணிபுரியும் நண்பர்கள்,பணி ஒய்வு பெற்ற
நண்பர்கள் என நம் அனைத்து நண்பர்களுக்கும், புத்தகம் தேடும்
அனைவருக்கும் இது உதவி புரியும்.

Friday, October 7, 2011

உலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.




தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்,  அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க  வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம்  வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்.


இணையதள முகவரி : http://www.unc.edu/~echeran/paadanool/unicode/

தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா மூன்று பாடம் இலவசம் அப்புறம் காசு கொடுத்து படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தளங்களுக்கு மத்தியில் தமிழை இலவசமாக வீட்டில் இருந்தபடியே முழுமையாக படிக்கலாம் என்று சொல்லி இத்தளம்  அனைவரையும் அழைக்கிறது. தமிழின் அடிப்படையான இலக்கணம் முதல் தமிழின் வார்த்தைகள் எங்கெல்லாம் எப்படி  பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பாடமாக கொடுத்து நம் தமிழ் புலமையை வளர்க்கிறது. தமிழ் மொழியைப்பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஓவ்வொரு பகுதியாக  உருவாக்கியுள்ளனர். மற்ற மொழியினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்  அழகான ஆங்கிலத்தில் விளக்கம் கூறி இருப்பது மேலும் சிறப்பு. இளங்கோ சேரன் என்பவர் 2004 -ம் ஆண்டு உருவாக்கிய இத்தளம் இன்றும் தமிழின் சுவையை அள்ளிக்கொடுத்து கொண்டிருப்பது தான் இத்தளத்தின் சிறப்பு. தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்கும்  தமிழ் வளர்க்க நினைப்பவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.