முகப்பு

Wednesday, September 5, 2012

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவது எப்படி

                               

Off line இல் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம்   மின்னஞ்சல் அனுப்பலாம்  மற்றும் ஒன்லைன்னில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டநெட்  கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்கு நீங்கள் கூகுல்குறோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail  சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய [ Tab ]  உருவாகும் அல்லது நீங்கள் ஒரு New Tab உருவாக்குங்கள். இப்பொழுது புதிய Tab இல் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும். அதில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.


அதில் Allow Google Mail என்பதை தெரிவு செய்யவும். இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்கள் மின்னஞ்சல் ID  காட்டும் அதில் எந்த  ID க்கு நீங்கள்  Off line இல் பார்க்க வேண்டுமோ அதை தெரிவு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும். அந்த  ID க்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward  செய்யலாம் அல்லது புதிதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம். மற்றும் ஏதாவது பெரு File லை Attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும் On line இல் உள்ள Move, Label, Mute, Report, Spam, Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள்  Off line இல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன்மூலம் Chat History கூட பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய  இணைப்பு இல்லாமலே பயன்படுத்திக்கொள்ளலாம்.




No comments:

Post a Comment