பாரிஸ்: தற்போதையக் காலச் சூழலில் கைத்தொலைப்பேசிகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மேலும் மனிதனுக்கு கைத்தொலைப்பேசி இன்றியமையாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இதனிடையே கைத்தொலைப்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக உலக சுகாதார மையம் சமீபத்தில் விடுத்துள்ள எச்சரிக்கைக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் (The International Agency for Research On Cancer’ நடத்திய ஆய்வில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது. கைத்தொலைப்பேசி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் கைத்தொலைப்பேசிகளில் அதிக நேரம் பேசுவதற்குப் பதிலாக செய்திகளை டைப் செய்து அனுப்பியும், கேண்ட்ஸ்பிரி மூலம் பேசவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment