இரண்டு சிம் போன்களுக்கு அடுத்தபடியாக, மூன்று சிம்களைக் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயரிக்கத்தொடங்கி விட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றை தயாரித்து வெளிஜிட்டது. அது ஒரு சி .டி .எம் .எ + இரண்டு ஜி .எஸ் .எம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி .எஸ் .எம் சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்கள் விற்பனைக்கு வந்துவிடும்.
- இந்த போனின் திரை 2 .5 அங்குல அகலம் கொண்ட டி . எப் .டி ஸ்கிரினாக உள்ளது.
- டிஜிட்டல் ஜூம் கொண்ட 1 . 3 மெகா பிக்சல் காமரா உள்ளது.
- விரும்பாத எண்களை தடை செய்யும் வசதி உண்டு.
- வீடியோ பிளேயர் , சவுன் ரெக்கோடர், டார்ச் லைட், ஈக்குவலைசருடன் கூடிய ஓடியோ பிளேயர், எப் .எம் ரேடியோ, ஆகியவை உள்ளது.
- A2DP இணைந்த புளுரூத், மைக்ரோ எஸ் .டி . கார்டு சப்போட் பண்ணும்.
- ஸ்பீட் டயலிங், கான்பிரன்ஸ் கால், வரும் அழைப்பினை இயக்கத்தில் உள்ள என்னொரு சிம்முக்கு மாற்றலாம்.
- 1100 mAh திறன் கொண்ட பட்டறி மூலம் 5 மணி நேரம் பேசலாம். [ ஒரு முறை சார்ச் செய்தல் 400மணி நேரம் தாக்குப்பிடிக்கும்]
இவ்வாறான சிறப்பியல்புகளைக்கொண்டது.
ஸேன் M 111 இன்டெக்ஸ், அகாய் ஆகிய நிறுவனங்களை அடுத்து, ஸேன் மொபைல்ஸ் நிறுவனமும், 3 சிம் இயங்கும் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த மொடலின் பெயர் M 111 . ஆனால் இதில் பயன் படுத்தும் மூன்று சிம்களும் ஜி .எஸ் .எம். வகையாக இருக்க வேண்டும் .

No comments:
Post a Comment